Мальчиков : பசங்க





மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி


"வோலோத்யா வந்தாச்சு "  யாரோ தோட்டத்தில் சத்தமிட்டார்கள்.
"ஆஹா வோலோத்யா தம்பி வந்தாச்சு " சமையல் கார நடாலியா சமயல் அறைக்கு ஓடிவந்து  கூச்சலிட்டான்.  சின்னப்பையன் வோடோல்யோவின் வருகையை மணிக்கு மணி எதிர்பார்த்துக் கொண்டு இருந்த கொரோல்யோவின் குடும்பமே இப்போது ஜன்னலுக்கு ஓடி வந்து பார்த்தது. பனி ப்புகையின்  நடுவே பெரிய ஸ்லெட்ஜ்  வண்டி மூன்று குதிரைகளுடன் வாசலில் நின்று கொண்டு இருந்தது. ஸ்லெட்ஜ் இல் யாரையும் காணவில்லை, வோலோட்யோவ் ஏற்கனவே வரவேற்பறைக்கு வந்து தனது சிவப்பேறிய விரல்களால் உடைகளை களைந்து கொண்டு இருந்தான்.
அவனது பள்ளிச சீருடை, தொப்பி, காலணி, தலை முடி, கன்னம் ஆகியவை பனி படிந்து  வெளுத்து இருந்தது. அவனது உடலில் புதுப் பனியின் மணம் வீசிக்கொண்டு இருந்ததுப்ர்ர்ர் என்று நடுக்கத்துடன் ஒலியை அவனிடம் எழுப்பியது..

அவனது தாயும் அத்தையும் அவனை ஆரத்தழுவி முத்தமிட ஆவலாக ஓடினர். நடாலியா அவனது காலணிகளை கழற்றினான். அவனது சகோதரிகள் உற்சாக மிகுதியால் குதித்தனர். கதவு மிகுந்த சத்தத்துடன் திறந்தது.. அவனது தந்தை கத்தரிக்கோலுடன் வந்தார். மகிழ்ச்சியுடன் கத்தினார், "நாங்கள்  உன்னை நேற்றே எதிர் பார்த்தோம் ..எப்படி இருக்கிறாய்? ... பயணம் எப்படி இருந்ததுஅவன்கிட்ட சொல்லுங்க அவன் அப்பாவைப் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்கட்டும்..ஏன்னா நான் தான் அவன் அப்பா!"
"போவ் வாவ் " என்று சத்தமாக கத்தியபடி மிலோர்ட் நாய் தனது வாலை சுவற்றிலும் நாற்காலியிலும் அடித்துக் கொண்டது. இரண்டு நீண்ட நிமிடங்களுக்கு அங்கு மகிழ்ச்சியின் கூச்சலே நிறைந்து இருந்தது. முதல் சந்தோஷ அலை ஓய்ந்த போது கொரோல்யோ கவனித்தார் அவர்களது வோலோத்யா மட்டுமல்ல இன்னுமொரு சிறுவன் கூட அவனைப்போலவே துணியினாலும் கம்பளியினாலும் சுற்றிக்கொண்டு அவனுடன் வந்து இருந்தான் என்று. அவன் அறையின் மூலையில் அசையாமல் நின்று இருந்தான். அவன் ஒரு ஓவர்கோட் அணிந்து இருந்தான். 
மெல்லிய குரலில் அவனது தாய் அவனிடம் கேட்டாள், "வோலோட்யோ யாரிது?"
"ஒ இது என்னுடைய பள்ளித் தோழன் லேண்டிலோவ். நம் வீட்டில் தங்குவதற்காக அழைத்து வந்தேன். " என்றான்.
"ரொம்ப சந்தோசம். வா தம்பி" கொரோல்யோ வாஞ்சையுடன் வரவேற்றார்.
மன்னிக்கவும் நான் கோட் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். "அந்த நாய்க்குட்டியை விரட்டுங்கள். நடால்யா லேண்டிலோவுக்கு உதவிகள் செய். அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு பொய் உள்ளே வை. " அடுத்தடுத்து ஆணை இட்டுக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்துக்குப் பின் ஆரம்ப உற்சாகம் ஓய்ந்த பிறகு, வோலோட்யோவும் லேண்டிலோவும் டி அருந்த மேசையில் அமர்ந்தனர். அவர்களது உடல் இன்னும் வெளிப்புறக் குளிரில் சிவந்து காணப்பட்டது. அறைக்குள் குளிர் கால சூரியனின் கதிர் கள் ஊடுருவியது. அது தேநீர் பேசினிலும் சமொவரிலும் எதிரொளித்தது. அந்த அரை வெது வெதுப்பாக இருந்தது. அந்தச் சிறுவர்களுக்கு அது இதமாக இருந்தது.
வெதுவெதுப்பும் குளிரும் அவர்களது உடலுக்குப்  புத்துணர்ச்சி ஊட்டிக்கொண்டு இருந்தது.
"சரி கிறிஸ்துமஸ் விரைவில் வர இருக்கிறது " கொரோல்யோ மெலிதாக ராகமிட்டு க் கொண்டு  கருஞ்சிவப்பு  சுருட்டை உருட்டிக்கொண்டே சொன்னார்.
இது ஒன்றும் ரொம்ப நாளாகத் தெரியவில்லை. உன் அம்மா நீ படிக்கச் சென்ற கோடைகாலத்தில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள் ஆனால் நீ திரும்பியாயிற்று. காலம் ஓடிவிடும் பய்யா... நீ சிந்திப்பதற்குள் முதுமை உன்னை அடைந்து விடும். லேண்டிலோவ் இன்னும் கொஞ்சம் தேநீர்  எடுத்துக் கொள். இங்கு நாம் எந்த சம்பிரதாயத்திலும் இல்லை. நன்றாக சாப்பிடுங்கள். "


வோலோட்யோவின் மூன்று சகோதரிகளும் காடியா சோனியா மாஷா (மூத்தவளுக்கு பதினோரு வயது ) மேசை இன் அருகில் அமர்ந்து புதியவனையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். வோலோட்யோவின் உயரத்தையும் வயதையும் கொண்டிருந்தான் லேண்டிலோவ். ஆனால்  உருண்டை  முகமும் நல்ல நிறமுமாக  இல்லை. அவன் ஒல்லியாகவும் நிறம் குறைந்தும் காணப்பட்டான். உதடுகள் தடித்தும், சிறுத்த கண்களோடும், ப்ருஷ் போன்ற முடியோடும் அழகற்றும் இருந்தான். அவன் மட்டும் பள்ளிச் சீருடையில் இல்லை என்றால், அவன் ஒரு சமையல் காரனின் மகனாக அறியப்பட்டு இருப்பான்.

அவன் அழுத்தக் காரனாகத தெரிந்தான், ஒரு வார்த்தை  கூடப் பேசவில்லை, ரொம்ப நேரம் சிரிக்காமலேயே இருந்தான். சின்னப் பெண்கள் அவனை தீர்க்கமாகப் பார்த்தார்கள், அவன் பெரிய அறிவாளி நிறைய படித்தவன் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவன் எதோ ஒரு சிந்தனையில் அகப்பட்டவனாகவும் அடிக்கடி அதில் மூழ்கி விடுபவனாகவும் தெரிந்தது. அவன் பேசும் போதெல்லாம் தலையை பின்னால் கொண்டு சென்று மீண்டும் மீண்டும் கேள்வியைக் கேட்ட்கும்படி வைத்தான்.

வோலோட்யோவைக் கூட சின்னப் பெண்கள் கவனித்தார்கள், சதா பேசிக்கொண்டே இருப்பவன், குறைவாகப் பேசுகிறான், வீட்டுக்கு வந்த மகிழ்ச்சி அவனிடம் குறைவாகவே  இருக்கிறது.
எப்போது தேநீர் குடிக்க அமர்ந்தாலும் அவன் பேசவில்லை ஒரே ஒரு முறை தான் அவனது சகோதரிகளிடம் பேசினான். முற்றிலும் மாறுபட்ட கருத்தை அப்போது கூறினான். கலிபோர்னியாவில் யாரும் தேநீர் குடிப்பதில்லை, ஜின் மட்டுமே குடிக்கிறார்கள்என்றான்.

அவனும் சிந்தனை வயப்பட்டவனைப் போலவே இருந்தான். லேண்டிலோவும் அவனும் ஒரே சிந்தனையில் இருப்பதாகத் தெரிந்தது. தேநீர் குடித்த பின் அனைவரும் நாற்றங்காலுக்கு  சென்றனர். சின்னப் பெண்கள் தங்களது தந்தையுடன் பையன்கள் வந்ததால் தடைப்பட்ட வேலையை தொடர்ந்தனர். பல்வேறு நிற காகிதங்களை வைத்து கிறிஸ்துமஸ் மரத்துக்கு பூக்களை கத்தரித்துக் கொண்டு இருந்தனர். அது உற்சாகமான வேலையாக இருந்தது. ஒவ்வொரு பூவின் வேலை முடிந்த போதும் ஆனந்தமாக பெண்கள் கூச்சலிட்டனர், ஏதோ அவை சொர்கத்திலிருந்து நேரே அவர்களது மடியில் விழுந்ததைப் போல கத்தினர், அவர்களது தந்தையும் அவர்களுடைய சந்தோசத்தில் பங்கேற்றார். சிலநேரங்களில் அவர் சலிப்புடன் கத்தரிக்கோலை நிலத்தில் குத்தினார்.
"இவன் நிகொலாவித்ச் எனது கத்தரிக்கோலை நீ மறுபடியும் எடுத்தாயா ?" என்று அவர்களது தாய் கேட்டவாறு அங்கே வந்தாள். "நான் எடுக்கவில்லை" என்று அழுவது போல் தந்தை கூறினார். பிறகு மீண்டும் சின்னப் பெண்களுடன் உற்சாகமாக பூக்களை வெட்ட ஆரம்பித்தார்.

இதற்கு முந்தைய விடுமுறையில் வோலோட்யோ வீட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த வேலைகளில் அவன் ஆர்வமுடன் ஈடு பட்டான், தோட்டத்திற்குச் சென்று பனியினால் கட்டப் படும் பொம்மையை மகிழ்ச்சியுடன் பார்ப்பான். இப்போது ஆளே மாறிவிட்டான்.
இந்த முறை அவன் அவ்வாறு செய்யாமல் லேண்டிலோவுடன் அளவளாவிக் கொண்டு இருந்தான். இருவரும் தனிமையில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். "முதலில் பேரம், பிறகு அங்கிருந்து தயுமேன், அப்புறம் டோம்ச்க் அதன் பின் கமச்சடகா. " என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டு போனான் லேண்டிலோவ்.

 "பிறகு பெரிங் நீரினைப்பைக் கடந்து படகின் மூலம் அமேரிக்காவை அடையலாம். அங்கு நிறைய அதிசயமான விலங்குகளைக் காணலாம். "

"அப்புறம் கலிபோர்னியாவுக்கும் " என்றான் வோலோட்யோ.
கலிபோர்னியா கீழே இருக்கிறது. அமேரிக்கா சென்றால் கலிபோர்னியா ஒன்றும் தூரமில்லை. அங்கு சென்றோமானால் வேட்டை யாடியும் கொள்ளையிட்டும் சந்தோசமாக வாழலாம். "

அத்துணை நேரமும் லேண்டிலோவ் சின்னப் பெண்களைத் தவிர்த்து வந்தான். அவர்களை சந்தேகக் கண்களுடனே பார்த்தான். மாலையில் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டி வந்தது. அந்நேரம் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
அவன் தனது தொண்டையை இப்படியும் அப்படியும் அசைத்து செருமிக்கொண்டே காட்டியாவிடம் கேட்டான் " நீ மேய்ன் ரீட் படித்திருக்கிறாயா?"

"இல்லை நான் கேட்பதெல்லாம் உனக்கு ஸ்கேட் பண்ணத்தெரியுமா? " கேட்டாள்.

லேண்டிலோவ் எந்த பதிலும் சொல்லாமல் உஸ் என்று பெரு மூச்சு விட்டான். ஏதோ தான் புழுக்கத்தில் இருப்பது போல் காட்டிக்கொண்டான்.
காட்டியாவை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டு அவன் கூறலானான் " பிரெய்ரி புல்தரையில் காட்டெருமைகள் நெருக்கி யடித்து ஓடும் போது தரைகள் அதிரும் அப்போது அச்சம் கொண்ட குதிரைகள் பக்கத்திலுள்ள வற்றை உதைத்து ஓடும் . "
அவன் அர்த்தத்துடன் புன்னகைத்தான்.

" சிவப்பு  இந்தியர்கள் ரயிலைத்தாக்குவார்கள். கொசுக்களும் பூச்சிகளும் மனிதர்களைக் கடிக்கும். "
"அது என்ன?"
அதுவும் எறும்பு மாதிரித்தான். அனால் இறக்கை இருக்கும். பயங்கரமாகக் கடிக்கும்.  நான் யார் தெரியுமா? "
" லேண்டிலோவ் "
இல்லை நான் மொண்டேஹோமோ. கழுகின் நகம். எப்போதும் வெல்பவர்களின் தலைவன் "

மாஷா இருட்டில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி சொன்னாள். "இரவு உணவில் லேண்டில் சேர்த்துக் கொள்வோம்.

லேண்டிலோவின் நடவடிக்கையும் வோலோட்யோவுடன் அவன் விளையாடாமல் எதையோ பற்றி விவாதிப்பதும் எதோ சிந்தனை வயப்பட்டு இருப்பதும், அந்நியமாகவும் சந்தேகப்படும் படியாகவும் இருந்தது. மூத்த இரு சின்னப் பெண்கள் காட்டியாவும் சோனியாவும் இந்த இருவரின் நடவடிக்கைகளை சந்தேகத்துடன் நோக்கலானார்கள்.

இரவில் இரு சிறுவர்களும் தூங்கச் செல்லும் பொது சின்னப் பெண்கள் இருவரும் பையன்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க முயன்றார்கள்.

ஆ கண்டுபிடித்தே விட்டார்கள்! இரு சிறுவர்களும் அமெரிக்காவிற்கு ஓடிவிடத் திட்டம் போட்டு உள்ளார்கள். அங்கு சென்று அவர்கள் தங்கம் தோண்டப் போகிறார்களாம்! பயணத்துக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் தயார் படுத்தி விட்டார்கள்! ஒரு துப்பாக்கி, இரு கத்திகள், பிஸ்கட்டுகள், தீப்பெட்டிகளுக்கு பதிலாக கண்ணாடித் தூள் ஒட்டிய காகிதங்கள், ஒரு காம்பஸ் மற்றும் பணமாக நான்கு ரூபிள்கள். அவர்கள் அறிந்து கொண்டார்கள் பையன்கள் ஆயிரக்கணக்கான மயில்கள் நடந்தே செல்ல இருக்கிறார்கள், சாலையில் புலிகளுடனும் மற்ற கொடிய விலங்குகளுடனும் சண்டை போடப்போகிறார்கள், தங்களது எதிரிகளை வீழ்த்தி விட்டு, தங்கமும் தந்தமும் கொண்டு வரப்போகிறார்கள். பெரிய கடற் கொள்ளையர்களாகப் போகிறார்கள், ஜின் குடிப்பார்கள், அழகான மனைவிமார்களை அடையப்போகிறார்கள், பெரிய தோட்டம் வாங்குவார்கள், என்றெல்லாம் எண்ணினார்கள். பையன்கள் பேசும் போது ஒருவரை ஒருவர் இடைமறித்தார்கள். லேண்டிலோவ் தன்னை அடிக்கடி மொண்டேஹோமோ, கழுகின் நகம், என்று அழைத்துக் கொண்டான். வோலோட்யோவை வெளுத்த மூஞ்சிக்காரா என்று கூப்பிட்டான்.

காட்டியா தனது தங்கையை எச்சரித்தாள், "இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லாதே! சொன்னால் அம்மா வோலோட்யோவை அமரிக்கா செல்ல விடமாட்டாள். பிறகு நமக்கு தங்கமும் தந்த வேலை செய்யப்பட்ட விலை உயர்ந்த பொருட்களும் கிடைக்காமல் போய்விடும்!". கிரிச்த்மசுக்கு இரண்டு நாள் முன்பு லேண்டிலோவ் ஆசியா வரை படத்தை வைத்துக் கொண்டு குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தான். வோலோட்யோவோ அறைகளின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு உணவருந்தாமல் ஏதோ தேனீயால் கொட்டப்பட்டவன் போல வீங்கிய முகத்துடன் இருந்தான்.
தோட்டத்தில் இருந்த கடவுள் சிலைமுன்பு சிலுவைக் கோடு நெஞ்சில் இட்டுக் கொண்டு சொன்னான், "கடவுளே இந்தப் பாவியை மன்னியுங்கள்! ஒரு பாவமும் அறியாத எனது தாயிடம் கருணை  காட்டுங்கள் !"

அந்த மாலையில்  அவன் வாய் விட்டு அழ ஆரம்பித்தான்.
படுக்கப் போகும் முன்பு தனது தந்தை, தாய் மற்றும் சகோதரிகளைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருந்தான்.
காட்டியாவுக்கும் சோனியாவுக்கும் விளங்கியது, ஆனால் குட்டிப் பெண் மாஷா குழம்பினாள், முற்றாகக் குழம்பினாள்.
ஒவ்வொரு  முறையும்  லேண்டிலோவை அவள் பார்க்கும்போதும் எண்ணிக்கொண்டாள், "இவன் வந்ததிலிருந்து சாப்பாட்டுக்கு பயறும் பருப்பும்தான் "
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள் காலையில்
பையன்கள் என்ன செய்கிறார்கள், எப்படி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்கிறார்கள்  என்று கண்டறிய காட்டியாவும் சோனியாவும் அவர்களது படுக்கையறைக்கு அருகில் ஊர்ந்து சென்றனர்.
லேண்டிலோவ் கோபமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான், "அப்படீன்னா நீ அமெரிக்காவுக்கு வரலையா? சொல்லு நீ வரலையா? "
வோலோத்யா மென்மையாக அழுதுகொண்டு சொன்னான் "எப்படி முடியும்? என்னோட அம்மா பாவம் இல்லையா?"
வெளுத்த மூஞ்சிக்காரா முதல்ல நீ தானே போலாமுன்னு சொன்னாய். இப்ப வேண்டாம் என்கிறாயே. உன்னால் எல்லாம் பாழாச்சு
"நான் பாழாக்கலை என்னோட அம்மாவை நினைச்சா பாவமா இருக்கு "
"கடைசியாச்  சொல்லு நீ அமேரிக்கா போகிறாயா இல்லையா? "
"அமெரிக்காவுக்கு போகிறேன். ஆனால் வீட்டில் கொஞ்ச நேரமாவது இருக்கலாம்னுட்டு..."
லேண்டிலோவ் முடிவாகச் சொன்னான் "அப்படீன்னா நான் தனியாக அமேரிக்கா போகிறேன் "
"என்னால் தனியாகப் போக முடியும். நீ தான் புலிகளுடன் சண்டை போடவேண்டும் என்று ஆசைப்பட்டாய்! இருந்துட்டுப் போகட்டும் என்னுடைய வெடிமருந்துகளையும் தோட்டாக்களையும் கொடு "
அந்த நேரத்தில் வோலோத்யா கசப்புடன் அழுதான், அவனது சகோதரிகள் உதவமுடியாமல் தவித்தனர். அமைதி அங்கே சிறிது நேரம் இருந்தது.
"நீ வரலை? " மீண்டும் லேண்டிலோவ் ஆரம்பித்தான்.
"நா... நா... நான்... வர்றேன் "
"நல்லது உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்து வை "
வோலோட்யோவை லேண்டிலோவ் உற்சாகமூட்டினான் , அமெரிக்காவைப் புகழ்ந்து பாடினான், புலியைப் போல உறுமினான்,சிங்கத்தின் தோலும் புலிகளின் தோலும் உனக்குத்தான் என்றான்.

இந்தக் கருத்த சின்னப் பையன் சிறுமிகளைக் கவர்ந்தான் ஏதோ அசாதாரணமாக அவர்களுக்குத் தோன்றினான்.
அவன் ஒரு வீரனைப்போல் காட்சி தந்தான். உறுதியானவனாகவும் பயம் அற்றும் தெரிந்தான் அவன் நிற்கும் தோரணை மெய்யாக  புலி நிற்பது போலவே  இருந்தது.
சிறுமிகள் தங்களது அறைக்குத் திரும்பி உடுத்திக் கொண்டனர். காட்டியாவின் கண்களில் நீர் கோர்த்து இருந்தது. "நான் மிகவும் பயந்து போய் இருக்கிறேன்" என்றாள்.

எல்லாம் சரியாகவே இருந்தது மதியம் இரண்டு மணிக்கு சாப்பாட்டு மேசைக்கு அனைவரும் வரும் போது வரைக்கும் .
பையன்களை வீட்டில் காணவில்லை.
அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு ஆட்களை அனுப்பித்தேடினர். ஒவ்வொரு குடியிருப்பாகத் தேடினர். அவர்களைக் காணவில்லை.
பக்கத்திலுள்ள கிராமத்துக்கும் ஆட்கள் போனார்கள் அங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாலை நேரத்து தேநீர் குடிக்க பையன்கள் வரவில்லை. இரவு உணவுக்கும் கூட அவர்கள் வரவில்லை. இப்போது அம்மாவின் கண்களில் நீர் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. 

அடுத்த நாள் மீண்டும் சுற்று வட்டாரங்களுக்கு ஆட்களை அனுப்பித் தேட ஆரம்பித்தனர். இப்போது ஆற்றின் கரைகளில் விளக்குகளுடன் சென்று தேடினர். என்ன இப்படி ஒரு தேவை இல்லாத கவலைகள் . 

அடுத்த நாள் ஒரு காவல் துறை அலுவலர் ஏதோ காகிதங்களுடன் வீட்டுக்கு வந்தார். அம்மா கதறினாள்.

திடீரென ஒரு ஸ்லெட்ஜ் வீட்டின் முன் வந்து நின்றது. மூன்று குதிரைகள் பனிப்  புகையின் நடுவே நின்று கொண்டு இருந்தது.
"வோலோத்யா வந்தாச்சு " யாரோ தோட்டத்தில் கத்தினார்கள்.
"குட்டி எஜமான் வோலோத்யா வந்துட்டாரு " நடாலியா உணவறைக்கு  ஓடிவந்து கத்தினான். மிலோர்ட் நாய் "போவ் வோவ் " சத்தமிட்டுக் குறைத்தது.
பையன்களை கடைவீதியில் பிடித்ததாக பின்னர் தெரிந்து கொண்டார்கள், அவர்கள் துப்பாக்கிக்கு தோட்டா வாங்க விசாரித்துக் கொண்டு இருந்த போது பிடிபட்டனர்.
வோலோட்யோ தனது தாயைக் கண்ட போது கட்டிக்கொண்டு கதறினான் .
சின்னப் பெண்கள் அடுத்தது என்ன நடக்கும் என்று ஆடிப்போய் இருந்தார்கள்.
தந்தை சின்னப் பையன்கள் இருவரையும் தனது அறைக்கு கூட்டிச் சென்று நிறைய நேரம் பேசினார்.
"இது தான் நீங்க செஞ்ச நல்ல காரியமா? உங்களுக்கே நல்லா இருக்குதா இது? உங்க பள்ளிக் கூடத்துக்கு இது தெரியாமல் இருக்கணும், கடவுளே! தெரிஞ்சுதுன்னா அவுங்க உங்களை நிருத்தீருவாங்க! நீங்க இதுக்கெல்லாம் வெட்கப்படனும்! லேண்டிலோவ் இதை நீதான் ஆரம்பிச்சு இருக்கணும் இதுக்கு நீ உன் அப்பா அம்மா கிட்ட தண்டனை வாங்கியே தீரனும்! ராத்திரி எங்கே இருந்தீங்க? "

"காவல் நிலையத்தில் " பெருமையுடன் சொன்னான் லேண்டிலோவ்.
வோலோட்யோ நெற்றியில் வினிகரில் நனைத்த பற்றுடன் படுக்கைக்குச் சென்றான்.

ஒரு தந்தி கொடுக்கப்பட்டது, அதன் பின் ஒரு பெண்மணி வந்தார், அவர்தான் லேண்டிலோவின் தாய்.
லேண்டிலோவ் சோகமாகவும் பெருமையுடனும் காணப்பட்டான், சின்னப் பெண்களை விட்டுச் செல்லும் போது எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆனால் காட்டியாவின் நோட்டுப் புத்தகத்தில் எழுதினான் "மொண்டேஹோமோ, கழுகின் நகம், எப்போதும் வெல்பவர்களின் தலைவன்."



1 comment:

  1. பாராட்டுக்களும் ....வாழ்த்துக்களும்....

    ReplyDelete