Wednesday, December 8, 2010

После театра : நாடகத்துக்குப் பிறகு



மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி 


எவ்கேனி ஒன்யேகின்-இன் நாடகத்தை கண்ட பின்பு  தாயுடன் நாடியா ஜேலேனின்  அப்போது தான் வீட்டுக்கு திரும்பியிருந்தாள். தனது அறைக்கு திரும்பி தனது உடைகளை களைந்தாள், தனது முடியினைத் தாழ்த்தி விட்டுக்கொண்டு அவசர அவசரமாக டாட் டியானா வுக்கு ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தாள்.

நான் உன்னைக் காதலிக்கிறேன் ஆனால் நீ என்னைக் காதலிக்கவில்லை.”

அதை எழுதிய பின்பு வாய் விட்டுச்சிரித்தாள். 
அவளுக்கு பதினாறுதான் ஆகியிருந்தது அதனால் அவள் இது வரை யாரையும் காதலிக்க வில்லை.
கோர்னி என்ற அலுவலரும் க்ருச்தேவ் என்ற மாணவன் ஒருவனும் அவளைக் காதலிப்பதாக எண்ணினாள். அனால் இன்றைய நாடகத்தைக் கண்ட பின்பு அந்தக் காதலை அவள் நம்ப மறுத்தாள். காதலிக்கப் படாமல் இருப்பதும் சந்தோசமில்லாமல் இருப்பதும் என்ன கொடுமையான வாழ்க்கை.
இருவருக்கு இடையில் உள்ள ஒருமித்த காதல் எவ்வளவு அழகானது, கவித்துவமானது. ஒன்யேகின் காதலில் இல்லை. ஆனால் டாட் டியானா காதலித்துக் கொண்டு இருந்தாள். அனால் இருவரும் ஒரே அளவு காதலில் இருந்தார்களானால் அது மிக்க மகிழ்ச்சியானது.
கோர்னியை நினைத்துக் கொண்டு  நாடியா எழுதினால் "என்னைக் காதலிப்பதாக கூறுவதை  விட்டு விடுங்கள். நான் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் புத்திசாலி, நாகரிகமானவர், சிறந்த திறமைசாலி...உங்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. நான் அப்படி ஒன்றும் சிறப்பானவள் அல்ல எனக்கு முக்கியத்துவம் ஏது மில்லை. என்னால் உங்களுக்கு இடைஞ்சல் தான்.... எனக்குத் தெரியும் என்னால் நீங்கள் ஈர்க்கப் பட்டு இருக்கிறீர்கள் என்று. உங்களது லட்சியக் காதலியை என்மூலம் அறிகிறீர்கள் என்று கூட எனக்குத் தெரியும். அனால் அது ஒரு தவறு. இப்போது நீங்கள் உங்களைக் கேளுங்கள் ஏன் இந்தப் பெண்ணை சந்தித்தோம் என்று.  உங்களது எதார்த்தமான உள்ளம் அதற்கான பதிலை தடுக்கிறது...".
நாடியா இப்போது வருத்தப் பட்டாள். தொடர்ந்து அழுதவாறே எழுதலானாள் . எனது தாயையும் தம்பியையும் விட்டு விட்டு வர இயலாது. ஒரு கன்னியாஸ்த்திரியின் உடையை அணிய வேண்டும். அது உங்களுக்கு வேறு ஒரு பெண்ணை விரும்ப வகை செய்யும். அல்லது நான் சாக வேண்டும்.."
அவளால் அதற்கு மேல் எழுத முடியவில்லை அவளது பார்வையை கண்ணீர் திரையிட்டு மறைத்தது. அந்த அரை முழுதும் மேசை, நாற்காலி, கூரை ஆகியவற்றின் மேல்  சின்னச்சின்ன வானவில்கள் தெரிந்தது, எதோ ஒரு கண்ணாடி ஊடகத்தின் வழியே பார்ப்பதுபோல் உணர்ந்தாள்.  அதற்கு மேல் அவளால் எழுத முடியவில்லை. கோர்நியை நினைத்துக கொண்டே சாய்வு நாற்காலியில் சோர்ந்து உட்கார்ந்தாள்கடவுளே ஆண்கள் எவ்வளவு ஆர்வமூட்டக் கூடியவர்களாகவும் ஈர்ப்புள்ளவர்களாகவும் உள்ளனர். கோர்நியின் மென்மையான அணுகுமுறை களை நாடியா நினைத்துப் பார்த்தாள். ஒருமுறை இசை யைப் பற்றி அவனுடன் விவாதம் செய்த ஒருவனிடம் அவன் எவ்வளவு பொறுமையாக தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு தனது குரல் தனது  நிலைமையை மிஞ்சாமல் மென்மையாக விவாதித்தான் என்று யோசித்தாள். இந்த சமூகத்தில் ஒருவன்  உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் மென்மையாக கையாள்பவன் நாகரிகமானவனாக அறியப்படுகிறான். அவனால்  தனது உணர்சிகளை முழுவதுமாக மறைக்க முடியவில்லை. இசை யின் மீது அவனுக்கு இருந்த காதல் வெளியே தெரிவதாக இருந்தது. இசையைப் பற்றிய முடிவில்லாத தர்க்கம் மற்றும் இசை அறிவே இல்லாதவர்களுடன் இசையைப்பற்றிய விவாதங்கள் அவனது பொறுமையை சோதித்துக்கொண்டே இருந்தது. அவன் பியானோ வாசிப்பதில் வல்லவனாக இருந்தான். அவன் மட்டும் ராணுவத்தில் இல்லாமல் இருந்து இருந்தால் அவன் ஒரு சிறந்த பியானோ இசைக்கலைஞன் ஆக இருந்திருப்பான். அவளது கண்களில் கண்ணீர் வறண்டு விட்டது. நாடியா இப்போது நினைத்துப் பார்த்தாள், ஒருமுறை அவன் தனது காதலை ஒரு இசை அரங்கில் அவளிடம் சொன்னான் மீண்டும் ஒருமுறை அனைத்துத் திசைகளிலும் வறண்ட காற்று வீசிக் வீசிக்கொண்டு கொண்டு இருந்த ஓய்வறையில் சொன்னான்.

நீங்கள் ஒரு வழியாக க்ருச்தேவ் என்ற மாணவனிடம் அறிமுக மாகிவிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவன் ஒரு புத்திசாலி, நீங்கள் அவனை நிச்சயமாக விரும்புவீர்கள். அவன் நம்மை நேற்று சந்திக்க வந்தான், இரண்டு மணி வரை எங்களுடன்  இருந்தான். நாங்கள் எல்லோரும் அவனால் சந்தோசப்பட்டோம். நீங்கள் அப்போது எங்களுடன் இல்லாதது ஒரு பெரிய குறை.  நாடியா மேசையின் மீது கைகளைப் பரப்பினாள், தந்து நெற்றியை மேசையின்  மேல் வைத்தாள். அவளது முடி கடிதத்தின் மேல் படர்ந்து கொண்டது. அவள் நினைத்துப் பார்த்தால், க்ருச்தேவ் கூட அவளைக் காதலித்தான். அவனும் கோர்நியைப் போல அவளிடம் இருந்து கடிதம் பெறத் தகுதியானவன் தான்க்ருச்தேவிற்கு கடிதம் எழுதுவது அவ்வளவு உகந்ததா? யோசித்தாள். அவளது நெஞ்சில் காரணமில்லாமல்  சின்னதாக ஒரு ஆனந்தம் தாண்டவமாடியது.   அது ஆரம்பத்தில் சிறியதாக தோன்றியது பின்னர் அதுவே பெரியதாக தோன்றி மிகப் பெரும் அலையாக அடிக்க ஆரம்பித்தது. நாடியா இப்போது கோர்னி மற்றும் க்ருச்தேவ் ஆகியோரை மறந்தாள். அவளது மகிழ்ச்சி இப்போது வளர்ந்து கொண்டே போனது. இனம் புரியாத அவளது மகிழ்ச்சி அவளது நெஞ்சிலிருந்து இப்போது அவளது கைகளுக்கும் கால்களுக்கும் பரவியது. மென்மையான தென்றல் அவளது முகத்தில் மெல்ல வீசியது அவளது தலையைக் கோதியது. அவள் சிரிக்கலானாள். தோள்கள் குலுங்க சிரித்தாள். மேசையும் அதன் மேலிருந்த விளக்கும் கூட குலுங்கியது. அவளது கண்களில் இருந்து கண்ணீர் கடிதத்தின் மீது தெறித்து விழுந்தது. அவளால் சிரிப்பினை அடக்க முடியவில்லை. காரணமில்லாமல் தான் சிரிக்க வில்லை என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு வேடிக்கை யாக எதோ ஒன்றினை நினைக்க முயற்ச்சித்தாள். "என்ன வேடிக்கையான மனிதர்கள் நாய்களைப்போல" அவள் சிரித்தாள். அவள் நினைத்துப் பார்த்தால். முந்தைய நாள் மாலையில் க்ருச்தேவ் அவளது "மக்சிம்" நாயுடன் விளையாடி விட்டு ஒரு புத்திசாலி நாயைப்பற்றி  சொன்னான் "அது ஒரு புத்திசாலி நாய், தோட்டத்தில் ஒரு காக்கையைத் துரத்திக் கொண்டு ஓடியது, பின்னர் காக்கை திரும்பி அந்த நாயைப் பார்த்துச் சொன்னது போடா நாயே! "அந்த நாய்க்கு தேர்ந்த காக்கையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை, குழப்பமடைந்த  நாய் குறைக்க ஆரம்பித்தது. அவள் இப்போது முடிவு செய்திருந்தாள். க்ருச்தேவை காதலிக்கலாம் என்று முடிவு செய்தால், கோர்நிக்கு எழுதிய கடிதத்தைக் கிழித்துப்  போட்டாள். அவள் இப்போது அந்த மாணவனைப் பற்றி யோசிக்கலானாள். அவனது காதல், அவளது காதல். அனால் அவளது சிந்தனை அவளது மூளைக்குள் எல்லாத் திசைகளிலும் சிந்துக்க ஆரம்பித்தது. எல்லாவற்றையும் பற்றி சிந்தித்தாள், தாயைப் பற்றி, வீதியைப் பற்றி, பென்சிலைப் பற்றி, பியானோவைப் பற்றி..... மகிழ்ச்சியுடன் சிந்தித்தாள், இப்போது எல்லாமே மகிழ்ச்சியாகத் தோன்றியது அவளுக்கு. அவளது உள்மனம் அவளுக்குச் சொல்லியது இது மட்டுமே சந்தோசம் அல்ல இன்னும் இருக்கிறது.... விரைவில் அவளது தாயுடன் அவள் கோர்பிகிக்கு செல்ல இருக்கிறாள், வசந்த காலம் வருகிறது பின்னர் கோடையும் வரும்.... விடுமுறையில் கோர்நியும் விடுமுறையில் வருவான், ஆவலுடன் அந்தத் தோட்டத்தில் உலாவுவான், ஆவலுடன் மகிழ்ச்சியாக காலம் கடத்துவான்க்ருச்தேவும் வருவான் அவளுக்கு பல அதிசயங்களைச் சொல்லுவான், ஆவலுடன் பல்லாங்குழி விளையாடுவான்... அவள் விண்மீன்கள்  கொண்ட தூய வானத்தினடியில் உள்ள தோட்டத்தில் இரவினைக் கழிக்க ஏங்கினாள். மீண்டும் அவளது தோள்கள் சிரிப்பில் குலுங்கியது. ஏதோ ஒரு மரத்துண்டினை கரையான் அரிப்பது போல் அவள் வசம் நுகர்ந்தாள். 
அவள் தனது படுக்கை அறைக்குச் சென்றாள். படுக்கையில் அமர்ந்தாள். மிகுந்த சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் காதல் ஏக்கத்தில் முறுவலித்தாள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடவுள் படத்தைப பார்த்து மகிழ்ச்சியுடன் கத்தினாள்
"கடவுளே கடவுளே!".

1 comment:

  1. \\இசை அறிவே இல்லாதவர்களுடன் இசையைப்பற்றிய விவாதங்கள்\\

    மிக அருமையானதொரு நடைமுறை வாழ்க்கையில் காணும் ஒரு இடக்கரடக்கல்.

    \\"என்ன வேடிக்கையான மனிதர்கள் நாய்களைப்போல"\\

    மனிதனின் உள்ளேயிருந்து பொங்கிவரும் அன்பை பெற்றுக்கொள்ள மாட்டாதவர்கள்,நாய்கள் போல் உலகம் முழுதும் சுற்றியும் பறந்து செல்லும் ஒன்றுக்காக் அலைந்து ஒன்றும் கிட்டாமல் காலம் கடத்திவிட்டு அன்பை உணராத தோல்வி மனப்பான்மையில் துவண்டுவிடும் போது மனிதர்கள் நாய்களை விட வேடிக்கையானவர்கள் தான்

    ReplyDelete