Sunday, December 19, 2010

தன்னிலை விளக்கம்


பிற மொழிக் கதைகளைத் தமிழில் வெளியிடுவதால் என்ன நன்மை?

பெரும்பாலும் இதைப் படிக்கும் அனைவருக்கும் தமிழைத்  தவிர குறைந்த பட்சம் வேறு ஒரு மேற்கு மொழியாவது தெரியும். இதை ஆங்கிலத்திலோ ரஷ்யனிலோ பிரெஞ்சிலோ கூட உங்களால் படித்து உணர முடியும். 

பிறகு ஏன் தமிழில் இவை வெளியிடப்பட்டு உங்களது ஆதரவு வேண்டப் படுகிறது?

'மெல்லத் தமிழினிச் சாகும், அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்'  என்ற கூற்றை அனைவரும் வேதனையுடன் படித்திருப்போம். நீங்கள் பிற மொழியில் இக் கதைகளைப் படிப்பதனால், தமிழில் படிப்பதைக் குறைத்துக் கொள்வீர்கள். பிற மொழி வளர அது காரணமாகிவிடும். இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வதால் பிற மொழியில் இவற்றைப் படிப்பதை நான் தடுக்கிறேன் என்று கொள்ளலாம், இது ஒரு வகையில் மறைமுகத் தாக்குதல். ஆம் தாக்குதலே சிறந்த தற்காப்பு என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.

பிற மொழிகள் வளர்ந்தது எப்படி?

இதன் காரணம் உங்களுக்கு நன்கு தெரியும். புதிதாக ஒன்றும் என்னால் சொல்லப்பட வேண்டியது  யாதும் இல்லை. 

'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொண்டிங்கு சேர்ப்பீர்' -- இந்தக் கூற்றைப் பாருங்கள்.... 

பிற மொழி இலக்கியங்கள் தமிழில் வருமாயின் பிற மொழியின் சிந்தனைகளும் கருத்துக்களும் தமிழ் மட்டுமே அறிந்த ஒருவருக்கு எளிதில் கிட்டும். புதிய வார்த்தைகளும் பயன்பாடுகளும் தமிழுக்கு வரும்.  



மேற்கண்ட பக்கத்தில் unesco  அழிந்து வரும் மொழிகள் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. நம்மால் பேசப்படும் இம் மொழி அழியாமல் காப்பாற்றுவது நம் கடமையுள் ஒன்று. 

அழிந்து வரும் மொழிகளில் ஒன்றான 'எவேன்கி' மொழிக் கவிஞர் அளிதெட் நேம்டுஷ்கின் கவிதையை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.

'எனது சொந்த மொழியையும் என் மக்களால் பாடப்பட்ட 
பாட்டுக்களையும் நான் மறந்தேனானால்
என் கண்களும் காதுகளும் இருந்து  என்ன பயன்;
என் வாயால் யாது பயன்;

'என் மண்ணின் மணத்தையும்  மறந்து அதற்கு 
நான் நன்கு சேவையும்  செய்யவில்லை என்றால்
என் கைகளால் என்ன பயன்?
இவ்வுலகில் எதற்கு  நான் வாழ்கிறேன்?

'அட, ஏன் நான் மடமையாக சிந்திக்கிறேன் 
எனது மொழி ஏழ்மையானது வலிமையற்றது என்று?
எனது தாயின் கடைசிச் சொற்கள் எல்லாம்
எவேன்கியில் சொல்லப்பட்டபோது.'

எவ்வளவு நம்பிக்கை அவருக்கு . உலகில் நாம் அம மொழியைக் கேள்விப் பட்டதே இல்லை. அப்படி இருக்க தமிழைப் பற்றி நமக்கு ஏன் கவலை. நீங்களும் நானும் இருக்கும் போது?

1 comment:

  1. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களாகிய நமக்கிருக்கும் ஒரே அழியாத சொத்து தமிழ் மட்டுமே.
    அது அழியாமல் காக்கப்பட வேண்டின்,தமிழர்கள் அழியாமல் வாழவேண்டும்.

    நாம் இரத்தச் சகதியில் நின்று கூவும்போது நீங்களும் நானும் மாத்திரமே மிச்சமிருக்கும் இந்த நேரத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    \\அப்படி இருக்க தமிழைப் பற்றி நமக்கு ஏன் கவலை. நீங்களும் நானும் இருக்கும் போது?\\

    ReplyDelete