Thursday, December 16, 2010

ஒப்புதல் வாக்குமூலம் !

நண்பர்களே இன்றுடன் இந்த வலைப்பூவை நுகர்ந்தவர்களது எண்ணிக்கை நூறைத்தாண்டியது.  எனக்கு ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு என் நன்றிகள். இந்த வலைப்பூவில் சில பல குறைகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவைகளுக்குக் காரணம் தமிழில் தட்டச்சு செய்ய நான் Google Transliterate இனைப் பயன் படுத்துகிறேன். எவ்வளவு எச்சரிக்கையுடன் இருந்தாலும் 'ர' 'ற' , 'ல' 'ள' , 'ன' 'ண'  மாறுதல் பிழைகள் ஏற்பட்டு விடுகிறது. குறில் நெடில் பிழைகள் மேலும் குற்றம். சந்திப் பிழைகள் மேலும் ஒரு குற்றம். இதை  எல்லாம் நீங்கள் பொறுத்துக் கொண்டு படிப்பதற்கு நன்றி. 

இந்த வலைப்பூவை 2010 டிசம்பர் முதல் தேதி தான் தொடங்கினேன், இன்று டிசம்பர் பதினாறாம் தேதி நூறு தடவைக்கும் மேல் இந்த வலைப்பூ பார்க்கப் பட்டிருக்கிறது. விரைவில் இது நான்கு இலக்க எண்ணிக்கையைக் கடக்கும் பிறகு ஐந்து  இலக்க எண்ணிக்கையைக் கடக்கும் அதன் பிறகு ஆறு இலக்க எண்ணிக்கையைக் கடக்கும். இதெல்லாம் உங்களது ஆதரவுடன் நடக்கும், நடக்க வேண்டும். 

நன்றி,
மா. புகழேந்தி

No comments:

Post a Comment